Paattukku Oru Thalaivan

Buy this
  • €49.99

Paattukku Oru Thalaivan
8000 722
33 1/3 R.P.M.
Music Director > Ilaiyaraaja
Record Label > Echo
Condition > Very Good Plus, Few Minor Marks

ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு ஜிமுச்சச்சா
ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு ஜிமுச்சச்சா
ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு.. ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு
ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு ஜிமுச்சச்சா

அழகிய நதியென.. அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன
விழிகளில் பலவித விரகமும் பெருகிட.. வழியது திறந்ததென்ன
தேகந்தான் மோகத்தில் வாட.. நாளுந்தான் மோனத்தில் கூட

துள்ளும் அழகிய நதியென.. அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன
விழிகளில் பலவித விரகமும் பெருகிட.. வழியது திறந்ததென்ன

ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு ஜிமுச்சச்சா
ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு ஜிமுச்சச்சா
ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு.. ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு
ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு ஜிமுச்சச்சா

தேடிய தேவதையே.. திரை மறைத்து மூடிய மாங்கனியே
ஓடிடும் காவிரியே.. உனை நினைத்துப் பாடிடும் இன்னிசையே

நாயகன் பூமடிமேல் நானும் பல நாடகமாட வந்தேன்
மாயவன் குழலிசையில் எனது மனம் மயங்கிய நிலையிருந்தேன்

தேரினில் ஏற வந்தேன்.. திசை பலவும் ஊர்வலம் போக வந்தேன்
ஊறிய இதழ்களின் தேன் எனை அழைக்க.. ஓடையில் நீந்த வந்தேன்

கேட்டது யாவையும் நான் தருவேன்.. இனி கேள்வி என்ன.. எனை அணைத்திட

அழகிய நதியென.. அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன

விழிகளில் பலவித விரகமும் பெருகிட.. வழியது திறந்ததென்ன

ரப்பப்ப ரப்பப்பப்பப் பாபா.. ரப்பப்ப ரப்பப்பப்பப் பாபா..
பாபா.. பாபா.. பாபாபா.. பாபா.. பாபா.. பாபாபா..

கோடியில் நீ ஒருவன்.. பாடி வரும் பாட்டுக்கு ஒரு தலைவன்
கூடிடும் என் துணைவன்.. எனது மனக் கோவிலில் நீ இறைவன்

ஆடிடும் பெண்ணழகே.. ஆசைகளை ஆள்கிற பேரழகே
தூவிய பூமலர் மேல் தோளணைத்துத் தூங்கிடும் தேன் துளியே

வானகம் வையகமும் வாழ்த்த வரும் நாளினைக் கேட்டு வந்தேன்
நானுன்னை சேர வரும் நாளில் ஒரு நாட்டியமாட வந்தேன்

மெல்லிய பொன் இடை மேடையிலே அரங்கேற வரும்.. தமிழ் மகனடி

அழகிய நதியென.. அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன

விழிகளில் பலவித விரகமும் பெருகிட.. வழியது திறந்ததென்ன

தேகந்தான் மோகத்தில் வாட

நாளுந்தான் மோனத்தில் கூட