Description
Thiruda Thiruda
C6US0705
Music Director > A.R.Rahman
Record Label > Magnasound
Condition > New
No words to describe this album :
ராசாத்தி என் உசுரு என்னு தில்ல
பூச் சூடி வாக்கப் பட்டு போன புள்ள
நீ போனா என் உடம்பு மண்ணுக் குள்ள
ரா வோடு சேதி வரும் வாடி புள்ள
ராசாத்தி என் உசுரு என்னு தில்ல
பூச் சூடி வாக்கப் பட்டு போன புள்ள
கார வீட்டுத் திண்ணை இல கறிக்கு மஞ்சள் அறைக்கையில
மஞ்சள அறைக்கும் முன்ன மனச அரச்சவளே
கரிசாக் காட்டு ஓடை இல கண்டாங்கி தொவைக்க இல
துணிய நனைய விட்டு மனச புழிஞ்சவளெ
நெல்லுக் களத்து மேட்டுல் என்ன இழுத்து முடிஞ்சி கிட்டு
போரவலே…
புதுக் கல்யாணச் சேலையில கண்ணீராத் தொடச்சி கிட்டுப்
போரவலே…
நான் தந்த மல்லிகைய நட்டாத்தில் போட்டு விட்டு
அரளிப் பூச் சூடி அழுதபடி போறவளே
கடலக் காட்டுக் குள்ள கை அடிச்சி சொன்ன புள்ள
காத்துல எழுதனும் பொம்பளங்க சொன்ன சொல்ல
தொட்டு தொட்டு பொட்டு வெச்ச சுட்டு வெரல் காயலையே
மறிக் கொழுந்து வெச்ச கையில் வாசம் இன்னும் போகலையே
மருதையில வாங்கித் தந்த வளவி ஓடையலையே
மல்லு வேட்டி மத்தியில மஞ்சக் கர மாறலையே
அந்தக் கழுத்து தேமலையும் காதோர மச்சத்தையும்
பார்ப்ப தெப்போ
அந்தக் கொலுசு மணி சிரிப்பும் கொமரி இலஞ் சிரிப்பும் கேட்ப தெப்போ
கருவேலங் காட்டுக் குள்ள கரிச்சான் குருவி ஒண்னு
சுதி மாறிக் கத்துதம்மா தொணையத் தான் காணோமின்னு
கடலக் காட்டுக் குள்ள கை அடிச்சி சொன்ன புள்ள
காத்துல எழுதனும் பொம்பளங்க சொன்ன சொல்ல
ராசாத்தி என் உசுரு என்னு தில்ல
பூச் சூடி வாக்கப் பட்டு போன புள்ள
Reviews
There are no reviews yet.