Description
Raja – Paadum Paravaigal
AYN CD 0073
Music Director > S.A.Rajkumar
Record Label > Ayngaran
Condition > Like New
கரிசல் காட்டு பெண்ணே என் அவனை கண்டாயா……..
கவிதை பேசும் கண்ணே என் அவனை கண்டாயா…….
என் இரு விழி நடுவினில் இருப்பவன் எவனோ அவனை கண்டாயா….
என் இருதய நரம்பினை அறுத்தவன் எவனோ அவனை கண்டாயா….
கொஞ்சம் கனவு கொடுத்தவன் என் தூக்கம் திருடி சென்றான்……
என்னை தன்னில் இணைத்தவன் இன்று ஏனோ தனியே சென்றான்…….
ஒருமுறை பார்த்தான் உயிர் வரை வேர்த்தேன்…..
அசைவத்தில் ஆசை அதிகம் என்னை தின்றானே…….
அவன் மட்டும் இங்கே ஒரு நொடி வந்தால்
அரை டசின் பிள்ளை பெற்று கையில் தருவேனே…….
அவன் மல்லிகை உதடுகள் பிடிக்கும்…..
அவன் மார்பின் முடிகள் பிடிக்கும்……
ஐயோ சந்தன நிறமோ பிடிக்கும்….
கொஞ்சம் சாய்கின்ற நடையும் பிடிக்கும்…..
என் அவனுக்கு மட்டும் யானை பலத்தில் ஏழு மடங்காச்சே …
அவன் ஒருவில் தீண்டி நொறுங்கிடவே நான் உயிரை வளர்த்தேனே……
ஓஓஓஓஓ..வருசங்கள் எல்லாம் நிமிஷங்கள் ஆக அவன் வருவான் என்று
காத்திருப்பேன்…………..
ஓஓஓஓஓ…அவன் குரல் கேட்கும் திசைகளில் எல்லாம் புது புது கோலம்
போட்டு வைப்பேன்…..
என் தாவணி வயதுகள் போச்சே……
ஒரு ஆயிரம் வளர் பிறை ஆச்சே…….
அந்த ராட்சசன் என் வரவில்லை…….
இன்னும் பூக்குடை சாய்ந்திடவில்லை……
என் இருபது போகும் எழுபதும் ஆகும் அவனை விடமாட்டேன்…….
என் மடியினில் ஒருநாள் தலைவைத்து தூங்கும்
அழகை நான் பார்ப்பேன்..
கரிசல் காட்டு பெண்ணே என் அவனை கண்டாயா……..
கவிதை பேசும் கண்ணே என் அவனை கண்டாயா…….
என் இரு விழி நடுவினில் இருப்பவன் எவனோ அவனை கண்டாயா….
என் இருதய நரம்பினை அறுத்தவன் எவனோ அவனை கண்டாயா….
கொஞ்சம் கனவு கொடுத்தவன் என் தூக்கம் திருடி சென்றான்……
என்னை தன்னில் இணைத்தவன் இன்று ஏனோ தனியே சென்றான்…….
Reviews
There are no reviews yet.