Description
Desam
Music Director > A.R.Rahman
Record Label > T-Series
Condition > Like New
A motivational album that is close to our heart.
உந்தன் தேசத்தின் குரல்
தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதா?
சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா
அந்த நாட்களை நினை
அவை நீங்குமா உனை
நிழல் போல் வராதா
அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா
வானம் எங்கும் பறந்தாலும்
பறவை என்றும் தன் கூட்டில்
உலகம் எங்கும் வாழ்ந்தாலும்
தமிழன் என்றும் தாய் நாட்டில்
சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும்
அங்கு செல்வ மரம் காய்த்தாலும்
உள் மனத்தின் கூவல் உன் செவியில் விழாதா?
கங்கை உன்னை அழைக்கிறது
யமுனை உன்னை அழைக்கிறது
இமயம் உன்னை அழைக்கிறது
பல சமயம் உன்னை அழைக்கிறது
கண்ணமூச்சி ஆட்டம் அழைக்கும்
சின்னப் பட்டாம் பூச்சி கூட்டம் அழைக்க
தென்னம் தோப்புத்துறவுகள் அழைக்க
கட்டிக் காத்த உறவுகள் அழைக்க
நீ தான் தின்ன நிலா சோறு நான் அழைக்க..
பால் போல் உள்ள வெண்ணிலவில்
பார்த்தால் சில கறையிருக்கும்
மலர் போல் உள்ள தாய் மண்ணில்
மாறாத சில வலியிருக்கும்
கண்ணீர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள்
அதில் செழிக்க வெண்டும் உந்தன் பயிர்கள்
இந்த தேசம் உயரட்டும் உன்னாலே
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே
அன்பு தாயின் மடியுனை அழைக்குதே தமிழா…
Reviews
There are no reviews yet.