Description
Paradesi
Music Director > G.V.Prakash Kumar
Record Label > Gemini Audio
Condition > Like New
அவத்த பையா செவத்த பையா அலிச்சாட்டியம் யேனடா
கவுச்சி மேலே ஆசபட்ட கரிச்சாங் குஞ்சு நானடா
செரட்டையில் பேஞ்ச சிறுமழை போல
நெஞ்சு கூட்டுல நெரஞ்சிருக்க
கஞ்சியில் கரைஞ்ச உப்பு கல்லு போல
கண்ணு கூட்டுல ஒளிஞ்சிருக்க, நம்ம பூமி வரண்டிருக்கு
உன் நாக்கு ஈரம் பட்டு வாழ்க்க நனைஞ்சிருக்கு…
ஓஓஓ… அவத்த பொண்ணே; செவத்த பொண்ணே
அலிச்சாட்டியம் யேனடி…
வெண்ணி தண்ணி காச்சவா
உன் மேலு காலு ஊத்தவா
காச்சு போன கையில
உன் காஞ்ச மூஞ்சி தேக்கவா
கொட்டான் குச்சியில் மேலு தேச்சி குளிக்க வையடி
யே… ஆக்குள் பக்கம் மக்கபோரு ஆகுதே
நீ தள்ளி நில்லடி.
வாராதடி.. தொடாதடி…
ஓஓஓ… அவத்த பையா செவத்த பையா
அலிச்சாட்டியம் யேனடா…
கூத்து பாக்க போகலாம்; கூட வாட வாரியா
சொல்லு பேச்சு கேக்குறேன்
கொஞ்சம் நெல்லு சோறு தாரியா
எள்ளு போட்ட ஈசல் தாரன் உன்னத் தருவியா
நான் முந்தி போட்ட மூடி வச்சு பூக்கட
நீ மோந்து பாப்பியா!
முத்தாடையா முட்டா பையா
அவத்த பொண்ணே செவத்த பொண்ணே
அலிச்சாட்டியம் யெனடி
இழுத்துவச்சுக் கழுத்தறுக்க
இளிச்சவாயன் நானடி
கயித்த அறுத்த கன்னுகுட்டி போல
சித்தன் போக்கில் நான் அலைஞ்சே
கருவா சிறுக்கி சீலையில் இறுக்கி
கட்டி போட்டு சிரிக்கிறியே
உன் சூழ்ச்சி பலிச்சிருச்சே!
நெல்லு சோத்து பானைக்குள்ளே
பூனை விழுந்திருச்சே!
Reviews
There are no reviews yet.