Description
Ayan
AVM Muzik 1004
Music Director > Harris Jayaraj
Record Label > AVM Muzik
Condition > New
பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ
அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ
மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ
சூடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை
சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை
கூட்டை தான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை
வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை
வானவில்லை போலே இளமையடா
தினம் புதுமையடா அதை அனுபவிடா
காலங்காலமாக பெரிசுங்கடா ரொம்ப பழசுங்கடா
நீ முன்னே முன்னே வாடா வாடா
எட்டித்தொடும் வயது இது
ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும்
அதிசயம் என்னவென்றால்
அதன் இருபக்கம் கூரிருக்கும்
கனவுக்கு செயல் கொடுத்தால்
அந்த சூரியனில் செடி முளைக்கும்
புலன்களை அடக்கி வைத்தால்
தினம் புதுப்புது சுகம் கிடைக்கும்
காலில் குத்தும் ஆணி உன் ஏணி என்று காமி
பல இன்பம் அள்ளிசேர்த்து ஒரு மூட்டைகட்டி வாநீ வாநீ
இதுவரை நெஞ்சிலிருக்கும்
சில துன்பங்களை நாம் மறப்போம்
கடிகார முள் தொலைத்து
தொடுவானம்வரை போய் வருவோம்
அடைமழை வாசல் வந்தால்
கையில் குடையின்றி வா நனைவோம்
அடையாளம் தான் துறப்போம்
எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்
என்ன கொண்டு வந்தோம்
நாம் என்ன கொண்டு போவோம்
அட இந்த நொடி போதும்
வா வேற என்ன வேண்டும் வேண்டும்
Nice album!
Reviews
There are no reviews yet.