Description
Avathaaram – Muthu Kulika Varigala
CD PYR 8302
Music Director > Ilaiyaraaja, Soundaryan
Record Label > Pyramid
Condition > Like New
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ…
மனசுல…
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ…
நெனப்புல…
வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளத நானுஞ்சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணே
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ…
மனசுல…
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ…
நெனப்புல…
எவரும் சொல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
ஒறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பா இனிக்குது
ஓட நீரோட
இந்த ஒலகம் அது போல
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போல
நெலையா நில்லாது
நினைவில் வரும் நெறங்களே
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லா துளிர்க்குது
நேசம் பொறந்தாலே…
ஒடம்பெல்லாம் ஏதோ சிலிக்குது
ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் மனம் போலே
அழகெல்லாம் கோலம் போடுது
குயிலே குயிலினமே
அந்த எசையால் கூவுதம்மா
கிளியே கிளியினமே
அதக்கதையாப் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நெனப்புல
வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன
Reviews
There are no reviews yet.