Description
Kadhal Rojavae – Anbe Unakkaga
CDSV 1070
Music Director > Ilaiyaraaja, Dev
Record Label > Shankar
Condition > Pre Owned, Name On Cover, Disc Excellent Plus
இளவேனில் இது வைகாசி மாதம்
விழியோரம் மழை ஏன் வந்தது
புரியாதோ இளம் பூவே
உன் மோகம்
இருப்பாக கண்ணில் நீர் வந்தது
பனி மூட்டம் வந்ததால்
மலர் தோட்டம் நீங்கியே
திசை மாறி போகுமோ தென்றலே
காதல் ரோஜாவே
பாதை மாறாதே
நெஞ்சம் தாங்காது….
இளவேனில்
இது வைகாசி மாதம்
விழியோரம் மழை ஏன் வந்தது
என் மேனி
நீ மீட்டும் பொன் வீணை
என்று அந்நாளில் நீதான் சொன்னது .
கையேந்தி நான் வாங்கும்
பொன் வீணை இன்று
கைமாறி ஏனோ சென்றது.
என்போல ஏழை
முழி விழும் வாழை
உண்டான காயம் ஆறக்கூடுமா.
காதல் ரோஜாவே
கனலை மூட்டாதே
நீ கொண்ட என் நெஞ்சை
தந்தாள் வாழ்த்துவேன்.
இளவேனில்
இது வைகாசி மாதம்
விழியோரம் மழை ஏன் வந்தது
பனி மூட்டம் வந்ததால்
மலர் தோட்டம் நீங்கியே
திசை மாறி போகுமோ தென்றலே
கண்ணான கண்ணே
உன் வார்த்தை நம்பி
கல்யாண தீபம் ஏற்றினேன்.
என் தீபம் உன் கோவில்
சேராது என்று
தண்ணீரை நானே ஊற்றினேன்
உன்னோடு வாழ
இல்லை ஒரு யோகம்.
நான் செய்த பாவம்
யாரை சொல்வது.
காதல் ரோஜாவே
நலமாய் நீ வாழ்க
நீ சூடும் பூமாலை
வான்போல் வாழ்கவே.
இளவேனில்
சில ராகங்கள் பாடும்
இளங்காற்றே எங்கே போகிறாய்.
பூஞ்சோலை
இது உன்னோடு வாழும்.
இமைக்காமல் என்னை
ஏன் பார்க்கிறாய்.
பனி மூட்டம் வந்ததால்
மலர் தோட்டம் நீங்கியே
திசை மாறி போகுமோ தென்றலே
காதல் ராஜாவே
உன்னை கூடாமல்
கண்கள் தூங்காதே…
இளவேனில்
சில ராகங்கள் பாடும்
இளங்காற்றே எங்கே போகிறாய்…
Reviews
There are no reviews yet.