Description
Enai Noki Paayum Thota
Music Director > Darbuka Siva
Record Label > Divo
Condition > New
An outstanding album, expected a better CD packing :(.
மறு வார்த்தை
பேசாதே!
மடிமீது
நீ தூங்கிடு!
இமை போல
நான் காக்க..
கனவாய்
நீ மாறிடு !
மயில் தோகை போலே
விரலுன்னை வருடும்!
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்..
விழிநீரும் வீணாக
இமைத்தாண்டக்
கூடாதென..
துளியாக
நான் சேர்த்தேன்..
கடலாகக்
கண்ணானதே..!
மறந்தாலும்
நான் உன்னை
நினைக்காத
நாளில்லையே ..!
பிரிந்தாலும்
என் அன்பு..
ஒருபோதும்
பொய்யில்லையே !
விடியாத
காலைகள்..
முடியாத
மாலைகளில்..
வடியாத
வேர்வைத் துளிகள்..
பிரியாத
போர்வை நொடிகள்!
மணிக்காட்டும் கடிகாரம்
தரும்வாதை
அறிந்தோம்..
உடைமாற்றும் இடைவேளை
அதன் பின்பே
உணர்ந்தோம்!
மறவாதே மனம்..
மடிந்தாலும் வரும்..!
முதல் நீ…!
முடிவும் நீ…!
அலர் நீ…!
அகிலம் நீ…!
தொலைதூரம்
சென்றாலும்…
தொடுவானம்
என்றாலும் நீ…
விழியோரம்தானே
மறைந்தாய்..
உயிரோடு முன்பே
கலந்தாய் …!
இதழ் என்னும்
மலர்கொண்டு..
கடிதங்கள்
வரைந்தாய்!
பதில் நானும்
தருமுன்பே
கனவாகி
கலைந்தாய் ..!
பிடிவாதம் பிடி !
சினம் தீரும் அடி!
இழந்தோம்..
எழில்கோலம் !
இனிமேல்
மழை காலம்..!!
Reviews
There are no reviews yet.