Description
Poovellam Kettuppaar – Thangapandi
CD PYR 8786
Music Director > Yuvan Shankar Raja, Suresh
Record Label > Pyramid
Condition > Like New
Such a wonderful album from Yuvan before Dheena.
இரவா பகலா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா
மழையா என்னை ஒன்றும் செய்யாதடி
ஆனால் உந்தன் மௌனம் மட்டும்
ஏதோ செய்யுதடி
என்னை ஏதோ செய்யுதடி
காதல் இதுதானா
சிந்தும் மணி போலே
சிதறும் என் நெஞ்சம்
கொஞ்சம் நீ வந்து
கோர்த்தால் இன்பம்
நிலவின் முதுகும் பெண்ணின் மனதும்
என்றும் ரகசியம் தானா
கனவிலேனும் சொல்லடி
பெண்ணே காதல் நிஜம்தானா
இரவா பகலா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதடி
என்னை தொடும் தென்றல்
உன்னை தொட வில்லையா
என்னை சுடும் காதல்
உன்னை சுட வில்லையா
என்னில் விழும் மழை
உன்னில் விழவில்லையா
என்னில் எழும் மின்னல்
உன்னில் எழவில்லையா
முகத்திற்கு கண்கள் ரெண்டு
முத்தத்திற்கு இதழ்கள் ரெண்டு
காதலுக்கு நெஞ்சம் ரெண்டு
இப்போது ஒன்றிங்கு இல்லையே
தனிமையிலே தனிமையிலே
துடிப்பது எதுவரை சொல் வெளியே
தனிமையிலே தனிமையிலே
துடிப்பது எதுவரை சொல் வெளியே
இரவா பகலா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதடி
வானவில்லில் வானவில்லில்
வண்ணம் எதுக்கு
வந்து தொடும் வந்து
தொடும் தென்றல் எதுக்கு
அந்தி வானில் அந்தி வானில்
வெட்கம் எதுக்கு
புரிந்தது புரிந்தது
இன்று எனக்கு
மழையினில் மேகம் தூங்க
மலரினில் வண்டு தூங்க
உன் தோளிலே சாய வந்தேன்
சொல்லாத காதலை சொல்லிட
சொல்லி ரசிப்பேன்
சொல்லி ரசிப்பேன்
சொல்லி சொல்லி
நெஞ்சுக்குள்ளே என்றும் வசிப்பேன்
அள்ளி அணைப்பேன்
அள்ளி அணைப்பேன்
கொஞ்சி கொஞ்சி
நெஞ்சுக்குள்ளே அள்ளி அணைப்பேன்
இரவா பகலா குளிரா வெயிலா
நம்மை ஒன்றும் செய்யாதினி
கடலா புயலா இடியா மழையா
நம்மை ஒன்றும் செய்யாதினி
இரவா பகலா குளிரா வெயிலா
நம்மை ஒன்றும் செய்யாதினி
கடலா புயலா இடியா மழையா
நம்மை ஒன்றும் செய்யாதினி
Reviews
There are no reviews yet.