Description
Paandi Naattu Thangam
8000 741
33 1/3 R.P.M.
Music Director > Ilaiyaraaja
Record Label > Echo
Condition > Excellent
உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசு அதை கேட்டு தான் தவிக்குது
இது உன்ன மட்டும் பாடும் பூங்குயில்
தினம் எண்ணி எண்ணி வாடும் பெண்மயில்
மனசு முழுதும் சருகாய் கருக
மயங்கும் நினைவோ மெழுகாய் உருக
உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசு அதை கேட்டு தான் தவிக்குது
பாட்டாலே புள்ளி வச்சு
பார்வையில கிள்ளி வச்சு
பூப்போல என்ன சேர்ந்த தேவியே
காத்தோட வந்து வந்து
காதோட சொன்ன சிந்து
கேக்காம போகும் வேறு பாதையே
நெஞ்சோட கூடுகட்டி சேர்ந்திருந்த ஜோடிதான்
இப்போது தனித்தனியா போனதென்ன கோலந்தான்
எட்டுதிக்கும் உன்னை எண்ணி இந்த மனம் தேடும்
பட்டுக் குயில் உன்னை மட்டும் நாளும் பாடும்
உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசு அதை கேட்டு தான் தவிக்குது
ஆ..ஹ ஹா..ஆ…ஆ.ஆ.ஹ ஹா..ஆ.. ஆ..ஆ..
நீ பாடும் இராகம் வந்து
என்னுசுர தொட்டதையா
நெஞ்ச விட்டு நேச பாசம் போகலை
பூச்சூடும் வேளையிலை
முள்ளு வந்து தச்சதைய்யா
புன்னை மரம் சூடும் காலம் கூடலை
உன்னோட வாழ்ந்திருந்தா ஊருக்கெல்லாம் ராணி தான்
உண்ணாமல் தனித்திருந்து வாடுதைய்யா மேனி தான்
உங்களைதான் எண்ணி எண்ணி என் உசுறு தேடும்
கண்ணுக்குள்ள நெஞ்சுக்குள்ளே கலந்தே வாழும்
உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசு அதை கேட்டு தான் தவிக்குது
இது உன்னை மட்டும் பாடும் பூங்குயில்
தினம் எண்ணி எண்ணி வாடும் பெண்மயில்
மனசு முழுதும் சருகாய் கருக
மயங்கும் நினைவோ மெழுகாய் உருக
உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசு அதை கேட்டு தான் தவிக்குது
Reviews
There are no reviews yet.