Description
Unnal Mudiyum Thambi
ECHO 8000 709
33 1/3 R.P.M.
Music Director > Ilaiyaraaja
Record Label > Echo
Condition > Very Good Plus, Few Visible Marks
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே
எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே
வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதி இல்லே
சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்லே
இது நாடா இல்லே வெறும் காடா
இதெக் கேக்க யாரும் இல்லே தோழா
இது நாடா இல்லே வெறும் காடா
இதெக் கேக்க யாரும் இல்லே தோழா
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே
எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே
வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது?
ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ
வீடின்றி வாசலின்றித் தவிக்குது
எத்தனை காலம் இப்படிப் போகும்?
என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்
என்றிங்கு வாழும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே
எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே
ஆத்துக்குப் பாதை இங்கு யாரு தந்தது?
தானாகப் பாதை கண்டு நடக்குது
காத்துக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது?
தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா?
கங்கையும் தெற்கே பாயாதா? காவிரியோடு சேராதா?
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா?
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே
எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே
இது நாடா இல்லே வெறும் காடா
இதெக் கேக்க யாரும் இல்லே தோழா
இது நாடா இல்லே வெறும் காடா
இதெக் கேக்க யாரும் இல்லே தோழா
Reviews
There are no reviews yet.