Description
Thenmerku Paruvakaatru
ATAF0004
Music Director > N.R.Raghunanthan
Record Label > Moserbaer Music
Condition > Like New
And the award goes to Vairamuthu :
கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லுடைச்சு வளர்த்த நீயே
முள்ளுகாட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே
காடைக்கும் காட்டு குருவிக்கும்
எந்த புதரிலும் இடமுண்டு …
கோடைக்கும் ஆடிக்கும் குளிருக்கும்
தாய் ஒதுங்கதான் இடமுண்டா ….. .
கரட்டு மேட்டையே மாத்துனா
அவ கள்ளபுளிஞ்சி கஞ்சி ஊத்துனா
கரட்டு மேட்டையே மாத்துனா
அவ கள்ளபுளிஞ்சி கஞ்சி ஊத்துனா .
கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லுடைச்சு வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே
உழவு காடுல வேத வெதப்பா
ஓலைகரயில கூழ் குடிப்பா
ஆவாரம் -குழையில கை துடைப்பா
பாவமப்பா …..
வேலி முள்ளில் அவ வெகெடுப்பா
நாழி அரிசி வச்சு ஓலையரிப்பா
புள்ள உண்ட மிச்சம் உண்டு உசிர் வளப்பா
தியாகமப்பா …
கிழக்கு விடியும் முன்ன முழிக்கிறா
அவ உலக்க பிடிச்சுதான் தேராகிறா
மண்ண கிண்டித்தான் பொழக்கிறா
உடல் மக்கிபோக மட்டும் உழைக்கிறா…
கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லுடைச்சு வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே
தங்கம் தனி தங்கம் மாசு -இல்ல
தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல
தாய்வழி சொந்தம் போல பாசமில
நேசமில்ல …
தாய் கையில் என்ன மந்திரமா
கேப்பகளியில் ஒரு நெய் -ஒழுகும்
காஞ்ச கருவாடு தேன்-ஒழுகும்
அவ சமைக்கையில
சொந்தம் நூறு சொந்தம் இருக்குது
பெத்த தாயி போல ஒன்னு நிலைக்குதா
சாமி நூறு சாமி இருக்குது
தாய் ரெண்டு தாய் இருக்குதா ..
கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லுடைச்சு வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே
Reviews
There are no reviews yet.